< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
|16 Oct 2023 1:32 AM IST
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஸ்ரீரங்கம்:
திருச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஸ்ரீரங்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் மனோஜ், மாவட்ட செயலாளர்கள் ஆறுமுகம், ஜீவரத்தினம் ஆகியோர் பேசினர். இந்து மதத்தை ஒழிப்பதாக கூறியவர்களை கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது.