< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
இந்து முன்னணியினர் தேசியக்கொடியுடன் ஊர்வலம்
|14 Aug 2022 10:39 PM IST
இந்து முன்னணியினர் தேசியக்கொடியுடன் ஊர்வலம் சென்றனர்.
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவினை முன்னிட்டு பெரம்பலூரில் இந்து முன்னணியினர் இருசக்கர வாகனத்தில் தேசியக்கொடியுடன் ஊர்வலமும், சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வினையும் நடத்தினர். இதற்கு அமைப்பின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக அமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் குணசேகர் கலந்து கொண்டார். முன்னதாக பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய இருசக்கர வாகன தேசியக்கொடி ஊர்வலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு முடிவடைந்தது. பின்னர் அவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.