< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
இந்துக்களை இழிவுபடுத்தியதாக கூறி இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
|19 Sept 2022 4:50 PM IST
இந்துக்களை இழிவுபடுத்தியதாக கூறி இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர்,
திருவள்ளூர் பஜார் வீதியில் நேற்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் தொடர்ந்து இந்துக்களை இழிவுபடுத்தியதாக கூறி தி.மு.க. சேர்ந்த ஆ.ராசாவை கண்டித்து கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் வினோத் கண்ணா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேசன், மாவட்டத் துணைத் தலைவர் வீரபத்திர ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணியின் மாநில செயலாளர் ரவீந்திரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியின் மாவட்ட, நகர, பொறுப்பாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆ.ராசாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.