< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்ட இந்து முன்னணி மாநில தலைவர் வலியுறுத்தல்
|27 April 2023 12:23 AM IST
ராஜேந்திர சோழனுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் வலியுறுத்தினார்.
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி சாமி நேற்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு கங்கை முதல் கடாரம் வரை வெற்றி பெற்று ஆட்சி செய்த மாமன்னன் ராஜேந்திரசோழனுக்கு மணிமண்டபம் கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிரகதீஸ்வரர் கோவிலை விரிவுபடுத்த வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ராஜேந்திர சோழன் பெயர் வைக்க வேண்டும். பழனி கோவில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளை பின்பற்றி செய்யப்படவில்லை. தமிழகத்தில் உள்ள கோவில்களை இடிப்பதில் இந்து அறநிலையத்துறை வேகமாக இருக்கிறது. இதனை மக்கள் சக்தி தடுத்து நிறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.