< Back
மாநில செய்திகள்
இந்து முன்னணி, சலவை தொழிலாளர்கள் முற்றுகை
திருநெல்வேலி
மாநில செய்திகள்

இந்து முன்னணி, சலவை தொழிலாளர்கள் முற்றுகை

தினத்தந்தி
|
17 Jun 2022 2:01 AM IST

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இந்து முன்னணி, சலவை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

நெல்லை டவுன் சலவைத்தொழிலாளர்கள் சமுதாய கோவில் நிர்வாக தலைவர் சுடலை மற்றும் ஊர்மக்கள் மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் சிவா, பொதுச் செயலாளர் பிரம்மநாயகம், செயலாளர்கள் சுடலை, ராஜ் செல்வம், துணைத்தலைவர் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

நெல்லை டவுன் பாட்டபத்து ஸ்ரீமாரி, உச்சிமாகாளி அம்மன் கோவில் சலவை தொழிலாளர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்டது ஆகும். இந்த கோவிலில் கடந்த மாசி மாதம் திருவிழா நடைபெற்றது. அங்கு தகராறு செய்தவர்கள், தற்போது தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். கோவில் விழாக்களை தடை செய்ய முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ஒரு அரசியல் கட்சியினரும் செயல்பட்டு வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்