< Back
மாநில செய்திகள்
இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கூட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
27 Nov 2022 7:00 PM GMT

வேடசந்தூர் ஒன்றிய, நகர இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கூட்டம் வேடசந்தூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள் விஜயகுமார், பொன்ராஜா, மணிகண்டபிரபு, வீராசாமி, ராஜேஷ், சரவணப்பாண்டி மற்றும் நகர பொறுப்பாளர்கள் அஸ்வின், ஜீவா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், வருகிற 7-ந்தேதி திண்டுக்கல்லில் நடைபெறும் பவுா்ணமி கிரிவலத்தில் அபிராமி பக்தர் குழுவில் அதிகம் பேர் கலந்து கொள்ள வேண்டும். 11-ந்தேதி ரெட்டியார்சத்திரத்தில் நடக்கும் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 25-ந்தேதி சேலத்தில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் அதிகம் பேர் கலந்துகொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்