< Back
மாநில செய்திகள்
இந்தி முதல்நிலை தேர்வு; 650 பேர் எழுதினர்
திருச்சி
மாநில செய்திகள்

இந்தி முதல்நிலை தேர்வு; 650 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
3 July 2023 1:02 AM IST

இந்தி முதல்நிலை தேர்வை 650 பேர் எழுதினர்.

திருச்சியில் தட்சிண பாரத் இந்தி பிரசார சபா சார்பில் இந்தி மாணவர்களுக்கான முதல் நிலை தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 107 மையங்களில் 11,056 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் திருச்சி மாவட்டத்தில் தேர்வு எழுத 1,953 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இதைத்தொடர்ந்து தென்னூர் மற்றும் ஸ்ரீரங்கத்தில் 2 மையங்களில் தேர்வு நடைபெற்றது. இதில் காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 620 பேர் எழுதினர். 1,333 பேர் தேர்வு எழுத வரவில்லை.

மேலும் செய்திகள்