< Back
மாநில செய்திகள்
இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மாநில செய்திகள்

இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தினத்தந்தி
|
12 Jun 2023 6:27 PM IST

இந்தித் திணிப்பு சுற்றறிக்கையை உடனே திரும்பப்பெற வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும் - இந்தி புத்தகங்களை வாங்க வேண்டும் - இந்தி திறனறிய சோதனை நடத்த வேண்டும்" என நீண்டதொரு இந்தித்திணிப்பு பட்டியலை ஊழியர்களுக்கான சுற்றறிக்கை என்ற பெயரில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் வெளியிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உதட்டளவில் தமிழ் - தமிழர் என ஏமாற்றுவது. செயல் என்று வரும்போது இந்தியை திணிப்பது என்ற ஒன்றிய அரசின் இரட்டை நிலைப்பாடையும், ஆதிக்க இந்தியையும் தமிழ்நாடும் - தி.மு.கழகமும் ஒருபோதும் அனுமதிக்காது. தனது இந்தித்திணிப்பு சுற்றறிக்கையை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் உடனே திரும்பப்பெற வேண்டும்! இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்