< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபயணம்
|17 Aug 2023 2:22 AM IST
சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டார்.
கொல்கத்தாவை சேர்ந்தவர் லட்சுமன் சக்கரவர்த்தி (வயது 61). கட்டிட காண்ட்ராக்டரான இவர் மரக்கன்றுகள் நட வேண்டும். பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.
சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கொல்கத்தாவில் தொடங்கி நேற்று விருதுநகர் வந்தார். அடுத்த 3 நாட்களில் கன்னியாகுமரி சென்றடைய உள்ளதாக தெரிவித்தார்.