< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ்மாணவர்களுக்கு உயர்கல்வி 3-ந்தேதி காரைக்குடியில் நடக்கிறது
|30 Jun 2023 12:30 AM IST
காரைக்குடியில் 3-ந்தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ்மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சிபெற்று உயர்கல்வி சேராத மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டுதலுக்காக தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்குபடி என்ற முகாம் காரைக்குடியில் உள்ள அழகப்பா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வருகிற 3-ந்தேதி அன்று காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. எனவே, உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் தவறாது கலந்து கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.