< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து விபத்து: 17 ஆடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !
|7 Aug 2022 6:20 AM IST
திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உயர் மின்னழுத்த மின்சார கம்பி அருந்து விழுந்து 17 ஆடுகள் உயிரிழந்தன.
திருப்பத்தூர்,
திருப்பத்துர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் ஆபீஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் ஜலபதி சொந்தமாக 40 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இந்த ஆடுகளை, மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, நடுவீதியில் செல்லக்கூடிய 11 ஆயிரம் கிலோ வாட்உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்தது. இதில் 17 ஆடுகள் உயிரிழந்தன. தகவல் அறிந்து வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் வட்டாட்சியர் சம்பத் தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் போலிசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
அப்போது மின் கம்பி பற்றி பல முறை புகார் அளித்தும் மின் வாரியம் சரி செய்யவில்லை என, பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.