< Back
மாநில செய்திகள்
உயர்மட்ட பாலம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

உயர்மட்ட பாலம்

தினத்தந்தி
|
12 Sept 2023 1:26 AM IST

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் அமையப்பட உள்ள உயர்மட்ட பாலம் பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் ரூ.2 கோடியில் அமையப்பட உள்ள உயர்மட்ட பாலம் பணிகளை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

ரூ.2 கோடியில் உயர்மட்ட பாலம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் நாடியம் - உடையநாடு சாலையில் காட்டுத்தளம் வடிகால் வாய்க்கால் குறுக்கே ரூ. 2 கோடியில் அமைக்கப்பட உள்ள உயர் மட்ட பாலம், முதுகாடு ஊராட்சி முதுகாடு பூலாங்கொல்லை வழி பெருமகளூர் சாலை ரூ. 71 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பீட்டில் முதல்-அமைச்சரின் கிராமச்சாலைகள் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலையில் அசோக்குமார் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், கந்தசாமி, மாவட்ட கவுன்சிலர் சுவாதி காமராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிவ. மதிவாணன் குழ.செ.அருள்நம்பி, பாமா, சாகுல் ஹமீது, ஊராட்சி மன்ற தலைவர்கள் நாடியம் பிரேம்செல்வன், முதுகாடு கவுரி சரவணமுத்து, துணைத் தலைவர் செல்லமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இலவச திருமணத்தை நடத்தி வைத்தார்

பேராவூரணி ஆத்தாளூர் வீரமகாகாளியம்மன் கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஒரு ஜோடிக்கு இலவச திருமணம் நடைபெற்றது. அப்போது மணமக்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை மற்றும் ஆட்டுக்குட்டி ஆகியவை வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் அமுதா, செயல் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அசோக்குமார் எம்.எல்.ஏ. மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதில் தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அப்துல் மஜீத், பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், தி.மு.க. நகரச்செயலாளர் சேகர், பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்