< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி...!
|20 Dec 2023 12:13 PM IST
லஞ்சப்பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் பெற்ற லஞ்சப்பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த 1ம் தேதி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், மதுரை சிறையில் உள்ள அங்கித் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட்டு மதுரை கிளை, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. மேலும், அவரின் ஜாமீன் மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.