< Back
மாநில செய்திகள்
வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது

தினத்தந்தி
|
28 Jun 2023 12:15 AM IST

வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2023-ம் ஆண்டுக்கான சுதந்திர தினவிழாவின் போது வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற தகுதி உள்ளவர்கள் https://awards.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் நாளைக்குள் (புதன்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட இணைப்புகள், கருத்துருக்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜார்ஜ் ரோடு, தூத்துக்குடி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்