< Back
மாநில செய்திகள்
மரபு விதை திருவிழா
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மரபு விதை திருவிழா

தினத்தந்தி
|
9 Aug 2023 1:06 AM IST

மரபு விதை திருவிழா நடந்தது.

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அசூர் சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் இளைஞர்கள் சார்பில் மரபு விதை திருவிழா நடைபெற்றது. இதில் தென்னை ஓலை கொண்டு உருவாக்கப்பட்ட இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் புதுச்சேரி, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த விதை சேமிப்பாளர்கள் மற்றும் இயற்கை உழவர்களின் விற்பனையகங்களில் பெருவாரியான மரபு காய்கறி விதைகள், பாரம்பரிய நெல் வகைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், கீரை விதைகள், புத்தகங்கள், துணிப்பைகள், மூலிகைச் செடிகள், பனை ஓலை நகைகள் போன்றவை இடம் பெற்றிருந்தன.

குரும்பாபாளையம், பனங்கூர், பேரளி, சிறுகன்பூர், நொச்சியம், அசூர், ஆய்குடி, குன்னம், சித்தளி, சிறுகுடல், தெற்கு மாதவி மற்றும் பல்வேறு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மரபு காய்கறி விதைகள், கீரை விதைகள், சிறுதானிய உணவு பொருட்களை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்