< Back
மாநில செய்திகள்
முட்டைக்கோழி விலை உயர்வு ஏன்?  சங்க நிர்வாகி விளக்கம்
நாமக்கல்
மாநில செய்திகள்

முட்டைக்கோழி விலை உயர்வு ஏன்? சங்க நிர்வாகி விளக்கம்

தினத்தந்தி
|
4 Sep 2022 4:58 PM GMT

முட்டைக்கோழி விலை உயர்வு ஏன்? சங்க நிர்வாகி விளக்கம்

தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் 80 வாரம் வரை முட்டையிடும். அதன்பின்பு இறைச்சிக்காக அவை விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் வயது முதிர்ந்த முட்டைக்கோழிகள் மாதந்தோறும் 25 லட்சம் வீதம் கர்நாடகா, கேரளா மாநிலத்துக்கு இறைச்சி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுவாக முட்டை விலை உயரும்போது, முட்டைக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்படும். அந்த நேரத்தில் 85 முதல் 90 வாரம் வரை வைத்திருந்து முட்டைக்கோழிகளை விற்பனை செய்வார்கள். முட்டை விலை குறையும்போது 75 வாரத்திலேயே விற்பனை செய்துவிடுவர்.

கடந்த சில நாட்களாக 'கிடுகிடு' என உயர்ந்து வந்த முட்டைக்கோழி விலை தற்போது கிலோ ரூ.110-ஐ தொட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-

முட்டை உற்பத்தி செலவை காட்டிலும், குறைத்து கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டதால், பண்ணையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வந்தது. அதனால் கடந்த 8 மாதமாக பண்ணைகளில் குஞ்சுவிடுவதை பண்ணையாளர்கள் தவிர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருவதால், இருக்கின்ற குறைந்த கோழியையும் விற்பனை செய்ய யாரும் முன்வரவில்லை. எனவே முட்டைக்கோழிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அதன் கொள்முதல் விலை உயர்ந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்