< Back
மாநில செய்திகள்
சுவாச கோளாறு பாதித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று உதவிய கலெக்டர்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சுவாச கோளாறு பாதித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று உதவிய கலெக்டர்

தினத்தந்தி
|
23 Jun 2023 1:00 AM IST

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் எண்ணேகொள் புதூர் அடுத்த அம்னேரி கிராமத்தை சேர்ந்தவர் சென்றாயன். தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா. இவர் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் சித்ரா தனது தாய் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 19-ந் தேதி நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தார். அதில் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, உதவித்தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. அந்த மனுவின் மீது உடனடி நடவடிக்கையாக கலெக்டர் சரயு நேற்று அம்னேரி கிராமத்தில் உள்ள சித்ரா வீட்டிற்கு சென்று ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 பெறுவதற்கான ஆணை மற்றும் 2 சக்கர நாற்காலி உள்ளிட்டவைகளை வழங்கினார். அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், தாசில்தார் சம்பத், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் விஜயகுமார், டாக்டர்கள் திலக், விமல், சத்தியமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் ரமாலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்