< Back
மாநில செய்திகள்
விருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர்
மாநில செய்திகள்

விருதுநகரில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினத்தந்தி
|
15 Oct 2023 1:38 AM IST

ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

விருதுநகர் தேசபந்து மைதானத்தில் மாவட்ட போக்குவரத்து போலீசாரும், ஸ்ரீவித்யா கல்லூரி நாட்டு நலத்திட்டப்பணி மாணவர்களும் இணைந்து ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியினை கல்லூரி முதல்வர் டாக்டர் கணேசன் தொடங்கி வைத்தார். ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பசுபதி வரவேற்றார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், பாண்டுரங்கன் உள்ளிட்ட போலீசாரும், கல்லூரி நாட்டு நலத்திட்டப்பணி மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்