< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்பட 4 பேர் சென்ற ஹெலிகாப்டர் ஈரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது
|25 Jan 2023 1:32 PM IST
ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் ஈரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சென்னை
வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் 4 பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஈரோட்டில் இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மோசமான வானிலை காரணமாக சத்தியமங்கலத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
காலை 10.40 மணியளவில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் பலர் பாதுகாப்பாக உள்ளனர்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பெங்களூரில் இருந்து திரிபுராவுக்கு தனியார் ஹெலிகாப்டர் மூலம் பயணம் செய்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
50 நிமிடங்களுக்குப் பிறகு வானிலை சீரான பிறகு ஹெலிகாப்டர் புறப்பட்டது.