திருவாரூர்
சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம்
|திருவாரூரில் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடந்தது.
திருவாரூர்;
தமிழ்நாடு நேரடி நெல் கொள்முதல் நிலைய சி.ஐ.டி.யூ. சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் திருவாரூர் மாவட்ட மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு சுமைப்பணி சம்மேளன மாநில துணைத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வெங்கடபதி, பொதுச்செயலாளா் அருள்குமார், சிஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், நேரடி கொள்முதல் நிலைய சுமைப்பணி தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான ஆண்டு போனஸ் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன்பு வழங்க வேண்டும். நெல் மூட்டை சிப்பத்திற்கு ரூ.30 மற்றும் அடையாள அட்டை வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்கள் முன்பு 27-ந் தேதி(வௌ்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.