< Back
மாநில செய்திகள்
சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி
மாநில செய்திகள்

சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
17 Nov 2022 12:15 AM IST

தேனியில் சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி பழைய பஸ் நிலையம் அருகில், சி.ஐ.டி.யு. சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ரெயில்வே குட்செட், டாஸ்மாக், நேரடி நெல் கொள்முதல் நிலையம், பொதுவினியோக திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு கிடங்குகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. பிடித்தம் உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜெயபாண்டி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்