< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
சொந்த ஊருக்கு படையெடுத்த பொதுமக்கள் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்
|13 Jan 2023 12:50 PM IST
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட நேற்று முதல் பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர். இதனால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள், பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட நேற்று முதல் புறப்பட்டு சென்றனர். இதற்காக அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் சிலர் தங்களது சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர்.
இதனால் சென்னையை அடுத்த தாம்பரம், பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தாம்பரம் சானடோரியம் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், மன்னார்குடி பகுதிகளுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக தாம்பரம் பஸ் நிலையம், கடப்பேரி, சானடோரியம், பெருங்களத்தூர், இரும்புலியூர் மேம்பாலம் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.