செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்
|விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை,
தேர்வு விடுமுறை, வார இறுதி நாள்களுடன் சேர்ந்து ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறைகள் வந்ததால், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் பேருந்து மற்றும் வாகனங்களில் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. விடுமுறை முடிந்து நாளை வழக்கம் போல அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளதால் ஏராளமானோர் இன்று சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன்படி செங்கல்பட்டு, பரனூர் சுங்கச்சாவடியிலிருந்து கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் வரையிலான சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தற்போது திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்று வருகின்றன.