< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை: தொடர் விடுமுறையால் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு குவிந்த மக்கள் - போக்குவரத்து நெரிசல்
|24 Dec 2022 12:50 AM IST
கிறிஸ்துமஸ் பண்டிகை, தொடர் விடுமுறையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையங்களில் மக்கள் குவிந்தனர்.
சென்னை,
உலகம் முழுவதும் கிறிஸ்தவ மதத்தினரின் முக்கிய பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை மாலை முதல் சென்னையில் இருந்து பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். கோயம்பேடு பஸ் நிலையம், சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை (கிறிஸ்துமஸ்) தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்ததால் பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், மக்களுக்கு சற்று பாதிப்பு ஏற்பட்டது.