< Back
மாநில செய்திகள்
வேலூரில் கடும் பனிப்பொழிவு
வேலூர்
மாநில செய்திகள்

வேலூரில் கடும் பனிப்பொழிவு

தினத்தந்தி
|
14 Jan 2023 11:06 PM IST

வேலூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மற்ற மாவட்டங்களை விட பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுவது வழக்கம். அதேபோன்று இந்தாண்டும் கார்த்திகை மாதத்தில் பனிப்பொழிவு குறைவாக காணப்பட்டது. ஆனால் மார்கழி மாதம் தொடக்கம் முதல் பனி அதிகரிக்க தொடங்கியது.

குறிப்பாக அதிகாலை வேளையில் கடும் பனி பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பனிப்பொழிவு மேலும் அதிகமாக காணப்பட்டது. காலை 9 மணி வரை பனியின் தாக்கத்தை உணரமுடிந்தது. போகிப்பண்டிகையையான நேற்று பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட புகையும் பனியுடன் சேர்ந்து காணப்பட்டது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அதிகளவு பனிமூட்டம் காணப்பட்டது.

அதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்தில் சென்றதையும் காண முடிந்தது. பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி செல்பவர்கள், குழந்தைகள், முதியவர்கள் வீட்டிற்குள்ளே முடங்கினர். குளிர்ச்சியான சீதோஷன நிலையால் பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் உறைநிலைக்கு சென்றன.

பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் செய்திகள்