< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
வந்தவாசியில் கடும் பனிப்பொழிவு
|5 Feb 2023 9:55 PM IST
வந்தவாசியில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சுற்றியுள்ள வங்காரம், வெண்குன்றம், பாதிரி, மாம்பட்டு, மருதாடு, தெள்ளூர், தெள்ளார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு காலை 8.30 மணி வரை இருந்தது.
இதனால் வாகனங்களில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.