< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்

திருவாரூரில், கடும் பனிப்பொழிவு

தினத்தந்தி
|
27 Nov 2022 12:15 AM IST

திருவாரூரில், கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.

திருவாரூரில், கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி வாகன ஓட்டிகள் சென்றனர்.

கடும் பனிப்பொழிவு

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ தீவிரமடைந்து கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை சற்று ஒய்ந்துள்ள நிலையில் பனிப்பொழிவு நிலவுகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவியது. நேற்று காலை 8 மணி வரை பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சூரியனை பார்க்க முடியவில்லை.

முகப்பு விளக்குளை ஒளிரவிட்டனர்

சாலைகளில் செல்லும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். திருவாரூர் கமலாலயம் குளத்தின் நடுவே உள்ள நாகநாதர் கோவில் பனி மூட்டத்தின் நடுவே ரம்மியாக காட்சியளித்தது. இதனை அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து ரசித்தப்படி சென்றனர். வெயில் அடித்த போதிலும் சற்று குளிர்ச்சியான நிலை நிலவியது.

குழந்தைகள் பாதிப்பு

பனிப்பொழிவு காரணமாக உல்லன் ஆடைகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. பனிப்பொழிவு காரணமாக குழந்தைகள், முதியவர்கள் காய்ச்சல், சளி போன்ற உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டனர்

மேலும் செய்திகள்