< Back
மாநில செய்திகள்
தரங்கம்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தரங்கம்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு

தினத்தந்தி
|
13 Feb 2023 12:15 AM IST

தரங்கம்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

பொறையாறு:

தரங்கம்பாடி பகுதியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

வாகன ஓட்டிகள் அவதி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நேற்று அதிகாலை சாலைகள், வயல்கள் தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழி காணப்பட்டது. இதன் காரணமாக ஆடுதுறை -தரங்கம்பாடி சாலையில் மங்கைநல்லூர், பெரம்பூர் சங்கரன்பந்தல், திருக்களாச்சேரி, திருவிடைக்கழி, காழியப்பநல்லூர், செம்பனார்கோவில், பரசலூர் பொறையாறு, தரங்கம்பாடி, காரைக்கால் சாலையில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். மேலும் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய விட்டவாறு சென்றனர்.

மீனவர்கள் கரை திரும்பினர்

பனிமூட்டம் காரணமாக அதிகாலை நேரத்தில் பணிக்கு செல்பவர்களும், வயல் வேலைக்கு செல்லும் கூலித்தொழிலாளர்களும் அவதிக்குள்ளாகினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைதினத்தையொட்டி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவதிபட்டனர். இந்த பனி பொழிவு அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிவரை நீடித்தது. மீன்பிடித்து கொண்டு கரை திரும்பும் மீனவர்களும் திசை தெரியாமல் சிரமப்பட்டு தாமதமாக கரை திரும்பினர்.

மேலும் செய்திகள்