< Back
மாநில செய்திகள்
5-வது நாளாக கடும் பனிப்பொழிவு
திருவாரூர்
மாநில செய்திகள்

5-வது நாளாக கடும் பனிப்பொழிவு

தினத்தந்தி
|
13 Feb 2023 12:03 AM IST

நன்னிலம் பகுதியில் 5-வது நாளாக தொடர்ந்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடரும் கடும் பனிப்பொழிவு காரணமாக காலை 9 மணி வரை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காரணமாக நன்னிலம் வழியாக இயக்கப்பட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளையும் பின்புற விளக்குகளையும் எரியவிட்டபடி சென்றன. நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணி முதல் காலை 9 மணி வரை பனிப்பொழிவு குறையாமல் இருப்பதால் நடைப்பயிற்சி செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

மேலும் செய்திகள்