< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
3-வது நாளாக கடும் பனிப்பொழிவு
|10 Feb 2023 12:15 AM IST
நன்னிலம் பகுதியில் 3-வது நாளாக கடும் பனிப்பொழிவு நிலவியது
நன்னிலம்:
நன்னிலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வந்தது.அதை தொடர்ந்து நேற்று 3-வது நாளாக கடும் பனிப்பொழிவு நிலவியது.இதனால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர். இந்த பனிப்பொழிவு காலை 4 மணி முதல் 9 மணி வரை குறையாமல் இருந்ததால், அதிகாலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்லும் பொதுமக்கள், நடைபயிற்சி செல்பவர்கள் மற்றும் பால் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் அவதிபட்டனர்.