< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் சூறைக்காற்றுடன் கனமழை: விமான சேவை பாதிப்பு
|10 Jun 2023 8:57 PM IST
சென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை,
சென்னையில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய பெங்களூர், மும்பை, அகமதாபாத், ராய்ப்பூர், ஐதராபாத், தூத்துக்குடி உள்ளிட்ட 11 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த விமானங்கள் சென்னையில் தரையிறங்கின.
அதேபோல் சென்னையில் இருந்து மும்பை, மைசூர், டெல்லி, கொச்சி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 11 விமானங்களும் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டது.