< Back
மாநில செய்திகள்

கோப்புப்படம்
மாநில செய்திகள்
கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு தீர்மானம்

5 Dec 2023 11:37 AM IST
மிக்ஜம் புயலால் நான்கு மாவட்டங்கள் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளன.
சென்னை,
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் நான்கு மாவட்டங்களும் பலத்த பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார்.