< Back
மாநில செய்திகள்
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை:சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு
தேனி
மாநில செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கன மழை:சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்வு

தினத்தந்தி
|
14 Oct 2023 12:15 AM IST

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால் சோத்துப்பாறை அணை நீர்மட்டம் உயர்ந்தது.

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை உள்ளது. அணையின் மொத்த உயரம் 126.28 அடியாகும். இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இந்த அணையின் மூலம் பெரியகுளம், தாமரைக்குளம், நஞ்சாவரம் ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த 2 மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சோத்துப்பாறை பகுதியில் கன மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்தது. அதன்படி நேற்று நீர்வரத்து வினாடிக்கு 42 கன அடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் 99.22 அடியாக உயர்ந்தது. குடிநீருக்காக வினாடிக்கு 3 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்