< Back
மாநில செய்திகள்
நெல்லையில் கனமழை; ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து
மாநில செய்திகள்

நெல்லையில் கனமழை; ரெயில்வே தரைப்பாலத்தில் பயணிகளுடன் சிக்கிய அரசுப் பேருந்து

தினத்தந்தி
|
15 May 2024 9:39 PM IST

நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, தரைப்பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் சிக்கி பழுதடைந்தது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாக பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நெல்லையின் பல்வேறு இன்று சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில், வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் அதிக அளவு மழைநீர் தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, தரைப்பாலத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் சிக்கி பழுதடைந்தது.

அந்த பேருந்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 65-க்கும் மேற்பட்ட பயணிகள் தண்ணீருக்கு நடுவே சிக்கி தவித்தனர். இது குறித்து தகவலறிந்து வள்ளியூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தில் சிக்கிய பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இதைத் தொடர்ந்து பழுதடைந்த பேருந்து அங்கிருந்து மீட்டுக் கொண்டு செல்லப்பட்டது.

மேலும் செய்திகள்