திருச்சி
மாவட்டத்தில் சாரல் மழை
|மாவட்டத்தில் சாரல் மழை பெய்தது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருச்சியில் கடந்த 10-ந் தேதி இரவு தொடங்கி விடிய, விடிய மழை பெய்தது. 11-ந் தேதியும் பகலில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் திருச்சியில் மழை பெய்யவில்லை. ஆனாலும் வானம் மேகமூட்டத்துடனேயே காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கமின்றி இருந்தது. காலை 11 மணி அளவில் லேசான சாரல் மழை பெய்தது. திருச்சியில் குளிர்ந்த சீதோஷ்ண நிலையே நிலவி வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
கல்லக்குடி-6.4, லால்குடி-1.6, புள்ளம்பாடி-4.2, தேவிமங்கலம்-2.2, சிரகுடி-3.4 வாத்தலைஅணைக்கட்டு-2, மணப்பாறை 1.6, பொன்னையாறுஅணை-4.4, மருங்காபுரி-5.2, முசிறி-2, புலிவலம்-5, நவலூர் குட்டப்பட்டு-2, துவாக்குடி-1, கொப்பம்பட்டி-25, தென்புறநாடு-29, துறையூர்-3, விமானநிலையம்-1.1, திருச்சி டவுன்-0.6. திருச்சி மாவட்டத்தில் சராசரியாக 4.15 மில்லி மீட்டரும், ஒட்டு மொத்தமாக 99.7 மில்லி மீட்டரும் மழை பதிவானது.