< Back
மாநில செய்திகள்
மதுரையில் கனமழை; மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்குள் புகுந்த மழைநீர்
மாநில செய்திகள்

மதுரையில் கனமழை; மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்குள் புகுந்த மழைநீர்

தினத்தந்தி
|
30 July 2022 11:15 PM IST

மதுரையில் இன்று கொட்டித் தீர்த்த கனமழையின் காரணமாக மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது.

மதுரை,

மதுரையில் இன்று மாலை திடீரென பெய்யத் துவங்கிய கனமழை காரணமாக, மதுரையின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இந்நிலையில் உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இன்று ஆடி முளைக்கட்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இன்று மாலை ஆடிவீதி உலா நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று பெய்த கனமழையின் காரணமாக கோவில் வளாகத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து கோவில் யானை பார்வதி, மழைநீர் சூழ்ந்த வளாகத்தைக் கடந்து வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. மேலும் சாமி சன்னதி, கொடிமரம் பகுதி மற்றும் ஆடிவீதிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகளில் கோவில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்