< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
ஜவ்வாது மலையில் பெய்த கனமழையால் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
|6 Sept 2022 1:59 PM IST
செங்கம் குப்பநத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் செய்யாற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் இரவு பெய்த கனமழையால் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து ஜவ்வாது மலைப் பகுதிகளில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது.
இதனால் செங்கம் செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. செங்கம் குப்பநத்தம் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் செய்யாற்றின் வழியாக வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.