< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் கனமழை: வேளச்சேரி, கத்திப்பாரா உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிச்சல்
|29 Sept 2023 9:44 PM IST
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது.
ஆலந்தூர்,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை முதல் இடியுடன் பலத்த மழை பெய்தது. கத்திப்பாரா பகுதிகளில் மின்சார கேபிள் புதைக்கும் பணி நடந்ததால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இதனால் மீனம்பாக்கம் பகுதியில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல் வரையிலும் கத்திப்பாராவில் இருந்து மீனம்பாக்கம் நோக்கி செல்ல கூடிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிச்சல் ஏற்பட்டது.
இதனால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றனர். கடும் போக்குவரத்து நெரிச்சல் காரணமாக வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார். அதேபோல் வேளச்சேரியிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.