< Back
மாநில செய்திகள்
நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
மாநில செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

தினத்தந்தி
|
2 Aug 2022 8:52 AM IST

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.

நெல்லை,

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும்,மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை: காரையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது.


உச்ச நீர்மட்டம் - 143 அடி, நீர் இருப்பு - 66.65 அடி, நீர்வரத்து - 4,832.29 கன அடி, நீர் வெளியேற்றம் - 867.25 கன அடியாக உள்ளது. மேலும், மழை காரணமாக சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்