< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பெங்களூருவில் கனமழை: சென்னைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்
|10 May 2024 8:14 AM IST
பெங்களூருவில் பலத்த கனமழை காரணமாக தரையிறங்க முடியாத 10 விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னை,
பெங்களூருவில் நேற்று இரவு சூறைக்காற்று, இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கனமழை காரணமாக பெங்களூருவில் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய சிங்கப்பூர், கோவா, மும்பை, டெல்லி, ஐதராபாத், ராஞ்சி, லக்னோ உள்ளிட்ட 10 விமானங்கள் நேற்றிரவு சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
இந்த விமானங்களில் பயணம் செய்த பயணிகளுக்கு சென்னையில் உணவு மற்றும் தண்ணீர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில், இன்று அதிகாலை பெங்களூருவில் வானிலை சீரடைந்தது. இதையடுத்து 10 விமானங்களும் சென்னையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக பெங்களூருவுக்குப் புறப்பட்டுச் சென்றன.