அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை
|அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையின் மட்டக்களப்பு-திரிகோணமலைக்கு இடையே நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்து விட்டது. ஆனாலும் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை பரவலாக மழை பெய்தது. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்யாமல் லேசாக தூறியது. 2-வது நாளாக நேற்றும் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் அவ்வப்போது விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. அரியலூரில் மதியம் 1.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.
இந்த மழையால் தற்போது அறுவடைக்கு தயராகி உள்ள நெற்பயிர்கள், மக்காச்சோளம் ஆகியவை பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
மழை அளவு விவரம்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
அரியலூர்-3.4, திருமானூர்-9.2, ஜெயங்கொண்டம்-4, ஆண்டிமடம்-3, சுத்தமல்லி நீர்த்தேக்கம்-5.