< Back
மாநில செய்திகள்
திருப்பூரில் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி
மாநில செய்திகள்

திருப்பூரில் கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி
|
21 Oct 2022 2:45 PM IST

புத்தாடைகள் வாங்க கடைவீதிகளுக்கு வந்த பொதுமக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரால் கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மாலையில் சில மணி நேரம் மட்டுமே பெய்த கனமழையில் பொள்ளாச்சி-திண்டுக்கல் சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

தீபாவளிக்காக புத்தாடைகள் வாங்க கடைவீதிகளுக்கு வந்த பொதுமக்கள், சாலைகளில் தேங்கிய மழைநீரால் கடைகளுக்குள் தஞ்சம் புகுந்தனர். இதனிடையே சிலர் அங்கு சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்