< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை..!
|26 Nov 2023 7:20 PM IST
சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகிற 2-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அதன்படி எழும்பூர், பெரியமேடு, கிண்டி, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், தாம்பரம், பல்லாவரம், சேலையூர், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.