விழுப்புரம்
திண்டிவனம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை
|திண்டிவனம் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
திண்டிவனம்,
திண்டிவனத்தில் நேற்று முன்தினம் வரை வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து வானம் கருமேகங்கள் சூழந்த படி காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை திடீரென பலத்த காற்று வீசியது. இதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. தொடக்கத்தில் சாரலாக பெய்த மழை, நேரம் செல்ல பலத்த மழையாகவும் பெய்தது. இதனால் திண்டிவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஜக்காம் பேட்டை, சிங்கனூர், இறையானூர், சலவாதி, பட்டணம், ஊரல் உள்பட பல கிராமப்பகுதிகளில் உள்ள சாலையில் தண்ணீர் பெருக்கொடுத்து ஓடியது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீா் தேங்கியது. திடீரென பெய்த இந்த மழையால பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பெய்த மழையால் பூமி குளிர்ந்து அப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.