சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன மழை
|சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
சென்னை,
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி,மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சேத்துப்பட்டு, சூளைமேடு, நெல்சன் மாணிக்கம் சாலை, நுங்கம்பாக்கம், டிடிகே சாலை, மதுரவாயல், கோயம்பேடு, அம்பத்தூர்,
அமைந்தகரை, வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை வளசரவாக்கம், கோடம்பாக்கம், தியாகராய நகர், மாம்பலம், போரூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.