< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
ஆழ்வார்திருநகரி, சாயர்புரம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை
|30 Aug 2022 3:48 PM IST
ஆழ்வார்திருநகரி, சாயர்புரம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, கோட்டூர், குருகாட்டூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இருந்தாலும் சில இடங்களில் நெற்பயிர்கள் அறுவடை நடைபெறுவதால், விளைந்த பயிர்களை நேற்று அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.
இதேபோன்று, சாயர்புரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பலத்த மழை பெய்தது. சாயர்புரம் பஜாரில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.