< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவையில் பலத்த காற்றுடன் கனமழை...!
|2 Jun 2023 5:43 PM IST
கோவையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கோவை,
வெப்பச் சலனம் காரணமாக இன்று கோவை மாநகரில் உக்கடம், கரும்புக்கடை, குனியமுத்தூர், ரெயில் நிலையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
மழையின் காரணமாக உக்கடம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் கருமேகங்கள் சூழந்து இருண்டதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
மேலும்,கோவையில் நேற்று பெய்த திடீர் மழையால் அவிநாசி ரோட்டில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் மிதந்து சென்றன.