< Back
மாநில செய்திகள்
பவானி அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை; வேருடன் சாய்ந்த வேப்ப மரம்
ஈரோடு
மாநில செய்திகள்

பவானி அருகே சூறைக்காற்றுடன் பலத்த மழை; வேருடன் சாய்ந்த வேப்ப மரம்

தினத்தந்தி
|
18 Sept 2023 2:13 AM IST

பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வேருடன் வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது.

பவானி அருகே சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வேருடன் வேப்ப மரம் சாய்ந்து விழுந்தது.

பவானி

பவானி பகுதியில் நேற்று காலை முதல் வெயில் அடித்தது. இந்த நிலையில் மலை 4 மணி அளவில் வானில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. பின்னர் 5.30 மணி அளவில் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதைத்தொடர்ந்து 6.20 மணிக்கு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை காரணமாக பவானி- ஆப்பக்கூடல் மெயின் ரோட்டில் சேர்வராயன்பாளையத்தில் சாலையோரம் இருந்த வேப்ப மரம் அடியோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடனே அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஒன்று திரண்டு வந்து மரத்தின் கிளையை வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதையடுத்து சிறிது நேரத்தில் போக்குவரத்து சீரானது. அதிகாரிகள் யாரையும் எதிர்பார்க்காமல் மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய வாலிபர்களை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

அந்தியூர்- கோபி

அந்தியூர், பர்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 6 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பர்கூர் மலைப்பகுதியில் ரோடுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6.45 மணிக்கு மிதமான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.

Related Tags :
மேலும் செய்திகள்