< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கனமழை: வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
|5 Aug 2022 6:30 AM IST
கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கோவை,
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது அதிதீவிரமடைந்துள்ளது. தமிழகத்தின் கோவை, நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழைக்கும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையில், கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.