< Back
மாநில செய்திகள்
கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

கனமழை எதிரொலி: தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

தினத்தந்தி
|
5 Jan 2024 8:33 PM IST

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கரையோர பகுதிகளுக்கு செல்லவோ வேண்டாம் என்றும் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். மருதூர், திருவைகுண்டம் அணைக்கட்டு, கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வான பகுதி மக்கள் கவனமாக இருக்கவும் மின்சாதனப் பொருட்களை கவனமாக கையாளவும் வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்